தமிழ் காணோளி

படர்க்கை

படர்க்கை

படர்க்கையைப் பற்றி படிக்கும் போது ஒருவரது சொல்லாற்றல்  தமிழில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.third person in Tamil

என் பெயர் கண்ணன். My name is Kannan
நான் ஒரு பையன் I am a boy
நான் உன் அண்ணன் – I am your brother
இந்தப் பழம் என்னுடையது
என் பெயர் அகிலா– My name is Akilla
நான் ஒரு சிறுமி I am a girl
நான் உன் தங்கை I am your sister
இந்தப் பூ என்னுடையது This flower is mine!

All these sentences are first person singular in present tense
உன் பெயர் கண்ணன் Your name is kannan
நீ ஒரு பையன் You are a boy
நீ என் அண்ணன் You are my brother

இந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours
உன் பெயர் அகிலா- Your name is Akilla
நீ ஒரு பெண் you are a girl.
நீ என் தங்கை you are my sister
இந்தப்பூ உன்னுடையது This flower is yours!

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களை நாம் தன்மை , முன்னிலை ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளப் பயன்படுத்தினோம்.

இந்த வாக்கியங்களைக் கூர்ந்து நோக்கினால் இவற்றுள் தன்மை , முன்னிலையைக் குறிக்காத சில பெயர்ச் சொற்களைக் காணலாம். கண்ணன், பையன், அண்ணன், பழம், அகிலா, பெண், தங்கை, பூ,புத்தகம் ஆகிய சொற்கள் படர்க்கையைக் குறிக்கின்றது. அதாவது நான், என் என்ற இரு சொற்கள் தான் இவற்றைத் தன்மை இடமாகவும் நீ , உன் என்ற சொற்கள் இவற்றின் இடத்தை முன்னிலையாகக் காட்டுகின்றன.இந்தக் குறிப்புகள் இல்லாத நிலையில் இவை படர்க்ர்கைப் பெயர்களாக இருக்கின்றன.
தமிழில் படர்க்கை என்று சொல்லும் போது அவை சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
முதலில் வருவது திணை.
திணை என்பது ஒரு ஒழுக்கத்தைக் குறிக்கும்.

தேவர், நரகர் மனிதர்கள் இவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணையாகக் கருதப்படுகிறது இவர்களுக்குக் அடுத்தபடியாக இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும், உயிர் இல்லாத பொருட்களும் அஃறிணையாகக் கருதப்படும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் யார் என்ற கேள்விக்குப்பதில் ஒரு தேவராகவோ, நரகராகவோ, மனிதனாகவோ இருந்தால் அது உயர் திணை என்று கொள்ள வேண்டும்.
என்ன எது என்ற இரு கேள்விகளுக்கு வரும் எல்லாப் பதில்களும் அஃறிணையாக இருக்க வாய்ப்பு உண்டு.
கண்ணன், அண்ணன், பையன் அகிலா, சிறுமி தங்கை என்ற சொற்கள் உயர்திணையையும், பூ பழம்,புத்தகம் ஆகியவை அஃறிணையையும் குறிக்கிறது

திணை என்ற ஒரு பிரிவு படர்க்கைப் பெயர்களுக்கு மட்டுமே வருகிறது. ஒரு பெயர் உயர் திணையாக இருந்தாலும் அஃறிணையாக இருந்தாலும் இந்தத் திணைப்பிரிவு தன்மை, முன்னிலை இரண்டிலும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பேசப்படும் பெயர்ச்சொல்லின் எண்ணிக்கை ஒன்றை காட்டுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

padaRrkkai- Third person in Tamil

என் பெயர் கண்ணன். My name is Kannan
நான் ஒரு பையன் I am a boy
நான் உன் அண்ணன் – I am your brother
இந்தப் பழம் என்னுடையது
என் பெயர் அகிலா– My name is Akilla
நான் ஒரு சிறுமி I am a girl
நான் உன் தங்கை I am your sister
இந்தப் பூ என்னுடையது This flower is mine!

All these sentences are first person singular in present tense
உன் பெயர் கண்ணன் Your name is kannan
நீ ஒரு பையன் You are a boy
நீ என் அண்ணன் You are my brother

இந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours
உன் பெயர் அகிலா- Your name is Akilla
நீ ஒரு பெண் you are a girl.
நீ என் தங்கை you are my sister
இந்தப்பூ உன்னுடையது This flower is yours!

We used these sentences to learn about first person and second person nouns. If we look closely, there are third person nouns in the sentences. Kannan, boy, brother, fruit, girl, sister, flower all are third person nouns. The first person indicators என்( en), நான்(naan) only shows the first person the noun belongs to. Similarlyநீ( nee), உன்(un) indicators change the nouns to second person.
We can clearly see the nouns by themselves are thrid person. The Tamil word for third person is padarkkai
Basically the third person pronoun has so many divisions. The first main division is on the class.(upper class)உயர் திணை, (inferior class) அஃ றிணை. The upper class is for gods, demons and humans. Any other word even if it is a living being it is considered as lower class.
These classifications can help us to add the correct suffix.

A clue

If one can answer a question  who with the word, then that word is  (upper class)உயர் திணை.

If one can answer a question  what or which with the word, then that word is (inferior class) அஃ றிணை.
Note that, the classification of uyarthinnai or akkRinnai is only for third person.
https://edpuzzle.com/embed/assignments/5830c5aff2d9327a2aa7cb3c/watch

To take the test go to the link

The password is- bmEmMn

படர்க்கை was originally published on தமிழ் அநிதம்

Categories: இடைநிலை-Intermediate, இலக்கணம், தமிழ் காணோளி, பயிற்சி- Practice, வாக்கியம் அமை- Sentence structure | பின்னூட்டமொன்றை இடுக

இடைச்சொல்- பாடம்

இடைச்சொல்- பாடம்

தொடக்க நிலைப் பாடத்தில் நாம் இடைநிலைச் சொற்களைப் பார்க்கப் போகிறோம். இவை தனியாக நின்று பொருள் தராது. அவை பெயர்ச்சொல்லின் இறுதியில் சேர்ந்து பொருள் தரும் ஒரு இடைநிலைகளைப் பயன்படுத்தத் தெரிந்தால் தமிழ்ல் பொருள் தரும் சொற்றொடர்களை அமைக்க முடியும். இந்த இடைநிலைகளைக் கொண்டு தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களை வினைச்சொல்லாகவும் மாற்றலாம்.

தொடக்க நிலையில் இடைநிலை சொற்களை   இரு வகையாகப் பிரிக்கலாம்.

காலம் காட்டும் ஈறுகள்

இடம் காட்டும் இடைநிலைகள்,

ஏற்கனவே காலம் காட்டும் இடைநிலைகள் இந்தச் சுட்டியில் கொடுக்கப் பட்டுள்ளது.

அவையாயாவன,இன்” “ட்”ற்”“த்” “கிறு” “கின்று” ஆநின்று“ “ப்” “வ்

இன்” “ட்”ற்”“த்”ஆகியவை இறந்த காலத்தையும், “கிறு” “கின்று” ஆநின்று“ஆகியவை நிகழ்காலத்தையும் “ப்” “வ்

ஆகியவை எதிர்காலத்தையும் காட்டும்.

இடம் காட்டும் ஈறுகளைப் பார்ப்போம்

தன்மை இடம் (ஒருமை) ஏன்

(பன்மை)ஓம்

முன்னிலை இடம் (ஒருமை)- ஆய்

முன்னிலை இடம் (பன்மை) ஈர்கள்

நாம் முதலிலேயே பார்த்தபடி தன்மையும் முன்னிலை எந்தப் பாலையும் காட்டாது.ஆனால் தொழிலைக் குறிக்கும் பெயர்சொற்களோடு சேர்ந்து பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்றும் ஒரு சொற்றொடர் அமைக்கும் போது பெயரைக் குறிக்கும் பெயர்ச்சொல்லை விட ஒரு வினைச்சொல்லே இடத்தையும் காலத்தையும் காட்டும்.

இங்கே நாம் தன்மை முன்னிலை இடங்களை வைத்துச் சில சொற்றொடர்களை அமைக்கலாம்.

முதலில் தொழில் பெயர்களை வினைச்சொல்லாக மாற்றலாம்.

அதன் படிகள்

  • “அல்” என்பதை எடுக்க வேண்டும்
  • “காலம் காட்டும் இடைச்சொல்லை”சேர்க்க வேண்டும்
  • இடம் காட்டும் இடைச் சொல்லைச் சேர்க்க வேண்டுமஇடைச்சொல்லைப் பயன் படுத்துதல் Using particlesin Tamil
  • Particles have an important work in Tamil language even though they cannot give any meaning. Particles are also referred as in-between words in Tamil. In an elementary level the learners need to know two types of particles. They are particles that show tense. And point of view.இன்-in” “ட் it”ற் iRr”“த்(ith)” “கிறு(kiRu)” “(கின்று(kinduRu)” ஆநின்று(aaninRu)“ “ப்(ip)” “வ்(iv)
  • Past tense particles areஇன்-in” “ட் it”ற் iRr”“த்(ith)”
  • Present tense are “கிறு(kiRu)” “(கின்று(kinduRu)” ஆநின்று(aaninRu)”
  • Future tense are “ப்(ip)” “வ்(iv)

Some particles show the point of view ending.  They are “ஏன்yehen”ஓம்om””ஆய் aai” ஈர்கள்eergal”

First person singular- “ஏன்yehen”

First person plural- “ஓம்om”

Second person singular “ஆய் aai”

Second person plural ஈர்கள்eergal”

Changing the action nouns to verbs In Tamil

  • Remove the“அல்
  • Add the appropriate tense particle
  • Add the appropriate point of view particle ending

Now play the game to reinforce the concept for  first person past tense

http://tamilunltdwp.suganthinadar.com/wp-content/uploads/articulate_uploads/pastenseGame8/story.html

இடைச்சொல்- பாடம் was originally published on தமிழ் அநிதம்

Categories: தமிழ் காணோளி, மீள் பார்வை, Review | குறிச்சொற்கள்: , | பின்னூட்டமொன்றை இடுக

ங குடும்பம்

Categories: உயிர்மெய் எழுத்துகள், தமிழ் காணோளி, Tamil vowel video | 2 பின்னூட்டங்கள்

உயிர் நெடில் காணொளி Tamil long vowels video

Categories: உயிர் எழுத்துகள், தமிழ் காணோளி, Tamil vowel video, Vowels | பின்னூட்டமொன்றை இடுக

உயிர் குறில் காணோளி-Tamil short vowels

Categories: உயிர் எழுத்துகள், தமிழ் காணோளி, Short and Long vowels, Tamil vowel video, Vowels | பின்னூட்டமொன்றை இடுக

உயிர் எழுத்து சொற்களின் காணோளி

உயிர் எழுத்துப் பயிற்சிக்கு உதவும் சொற்களை கண்ணால் கண்டு காதால் கேட்டு மகிழுங்கள்

Enjoy seeing and listening to the Tamil vowel words

Categories: உயிர் எழுத்துகள், தமிழ் காணோளி, Play and learn, Tamil vowel video, Vowels | குறிச்சொற்கள்: | பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.