பயிற்சி- Practice

படர்க்கை

படர்க்கை

படர்க்கையைப் பற்றி படிக்கும் போது ஒருவரது சொல்லாற்றல்  தமிழில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.third person in Tamil

என் பெயர் கண்ணன். My name is Kannan
நான் ஒரு பையன் I am a boy
நான் உன் அண்ணன் – I am your brother
இந்தப் பழம் என்னுடையது
என் பெயர் அகிலா– My name is Akilla
நான் ஒரு சிறுமி I am a girl
நான் உன் தங்கை I am your sister
இந்தப் பூ என்னுடையது This flower is mine!

All these sentences are first person singular in present tense
உன் பெயர் கண்ணன் Your name is kannan
நீ ஒரு பையன் You are a boy
நீ என் அண்ணன் You are my brother

இந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours
உன் பெயர் அகிலா- Your name is Akilla
நீ ஒரு பெண் you are a girl.
நீ என் தங்கை you are my sister
இந்தப்பூ உன்னுடையது This flower is yours!

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களை நாம் தன்மை , முன்னிலை ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளப் பயன்படுத்தினோம்.

இந்த வாக்கியங்களைக் கூர்ந்து நோக்கினால் இவற்றுள் தன்மை , முன்னிலையைக் குறிக்காத சில பெயர்ச் சொற்களைக் காணலாம். கண்ணன், பையன், அண்ணன், பழம், அகிலா, பெண், தங்கை, பூ,புத்தகம் ஆகிய சொற்கள் படர்க்கையைக் குறிக்கின்றது. அதாவது நான், என் என்ற இரு சொற்கள் தான் இவற்றைத் தன்மை இடமாகவும் நீ , உன் என்ற சொற்கள் இவற்றின் இடத்தை முன்னிலையாகக் காட்டுகின்றன.இந்தக் குறிப்புகள் இல்லாத நிலையில் இவை படர்க்ர்கைப் பெயர்களாக இருக்கின்றன.
தமிழில் படர்க்கை என்று சொல்லும் போது அவை சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
முதலில் வருவது திணை.
திணை என்பது ஒரு ஒழுக்கத்தைக் குறிக்கும்.

தேவர், நரகர் மனிதர்கள் இவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணையாகக் கருதப்படுகிறது இவர்களுக்குக் அடுத்தபடியாக இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும், உயிர் இல்லாத பொருட்களும் அஃறிணையாகக் கருதப்படும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் யார் என்ற கேள்விக்குப்பதில் ஒரு தேவராகவோ, நரகராகவோ, மனிதனாகவோ இருந்தால் அது உயர் திணை என்று கொள்ள வேண்டும்.
என்ன எது என்ற இரு கேள்விகளுக்கு வரும் எல்லாப் பதில்களும் அஃறிணையாக இருக்க வாய்ப்பு உண்டு.
கண்ணன், அண்ணன், பையன் அகிலா, சிறுமி தங்கை என்ற சொற்கள் உயர்திணையையும், பூ பழம்,புத்தகம் ஆகியவை அஃறிணையையும் குறிக்கிறது

திணை என்ற ஒரு பிரிவு படர்க்கைப் பெயர்களுக்கு மட்டுமே வருகிறது. ஒரு பெயர் உயர் திணையாக இருந்தாலும் அஃறிணையாக இருந்தாலும் இந்தத் திணைப்பிரிவு தன்மை, முன்னிலை இரண்டிலும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பேசப்படும் பெயர்ச்சொல்லின் எண்ணிக்கை ஒன்றை காட்டுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

padaRrkkai- Third person in Tamil

என் பெயர் கண்ணன். My name is Kannan
நான் ஒரு பையன் I am a boy
நான் உன் அண்ணன் – I am your brother
இந்தப் பழம் என்னுடையது
என் பெயர் அகிலா– My name is Akilla
நான் ஒரு சிறுமி I am a girl
நான் உன் தங்கை I am your sister
இந்தப் பூ என்னுடையது This flower is mine!

All these sentences are first person singular in present tense
உன் பெயர் கண்ணன் Your name is kannan
நீ ஒரு பையன் You are a boy
நீ என் அண்ணன் You are my brother

இந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours
உன் பெயர் அகிலா- Your name is Akilla
நீ ஒரு பெண் you are a girl.
நீ என் தங்கை you are my sister
இந்தப்பூ உன்னுடையது This flower is yours!

We used these sentences to learn about first person and second person nouns. If we look closely, there are third person nouns in the sentences. Kannan, boy, brother, fruit, girl, sister, flower all are third person nouns. The first person indicators என்( en), நான்(naan) only shows the first person the noun belongs to. Similarlyநீ( nee), உன்(un) indicators change the nouns to second person.
We can clearly see the nouns by themselves are thrid person. The Tamil word for third person is padarkkai
Basically the third person pronoun has so many divisions. The first main division is on the class.(upper class)உயர் திணை, (inferior class) அஃ றிணை. The upper class is for gods, demons and humans. Any other word even if it is a living being it is considered as lower class.
These classifications can help us to add the correct suffix.

A clue

If one can answer a question  who with the word, then that word is  (upper class)உயர் திணை.

If one can answer a question  what or which with the word, then that word is (inferior class) அஃ றிணை.
Note that, the classification of uyarthinnai or akkRinnai is only for third person.
https://edpuzzle.com/embed/assignments/5830c5aff2d9327a2aa7cb3c/watch

To take the test go to the link

The password is- bmEmMn

படர்க்கை was originally published on தமிழ் அநிதம்

Categories: இடைநிலை-Intermediate, இலக்கணம், தமிழ் காணோளி, பயிற்சி- Practice, வாக்கியம் அமை- Sentence structure | பின்னூட்டமொன்றை இடுக

திணைகள்- ஊடாடும் பட அகராதி

திணைகள்- பட அகராதி:

தமிழில் உள்ள திணைகளைப் பற்றிய விளக்கங்கள் ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் ஒரு பட அகரமுதலி திணைகளை மனதில் பதிய உதவி செய்யும். ஒருவர் பெயர்ச்சொல்லை சரியாக இலக்கணப்படி தமிழில் எழுத முடியும். ஏன் என்றால் ஒவ்வொரு திணைக்கும் ஏற்றபடி இலக்கண விதிகள் மாறும். அதனால் இந்தப் பட அகரமுதலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பட அகரமுதலிக்கான விளக்கமும் கீழே ஒரு சின்ன விளையாட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

உயர் திணை

உயர் திணை

அஃறிணை

அஃறிணை

Tamil noun classes – an interactive picture dictionary

The classification of Tamil nouns into upper class and inferior class. Though it is easy to understand the concept using a picture dictionary. Along with the printable pictures there is an interactive picture dictionary also.

http://tamilunltdwp.suganthinadar.com/wp-content/uploads/articulate_uploads/classes_of_Tamil_nouns_a_Picture_dictionary/story.html

திணைகள்- ஊடாடும் பட அகராதி was originally published on தமிழ் அநிதம்

Categories: இலக்கணம், தொடக்க நிலை, பயிற்சி- Practice, மீள் பார்வை | குறிச்சொற்கள்: , | பின்னூட்டமொன்றை இடுக

ஆண்பாலும் பெண்பாலும்.Masculine gender and Feminine gender

பொதுவாக ஆங்கில மொழியில் ஆண், பென் என்ற இரு பால் வகைகளே உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் ஐந்து வகைப் பால்கள் உள்ளன.இங்கு ஆண்பால் ஒருமை பெண்பால் ஒருமை என்ற இருவகை பால்களையும் பார்க்கலாம். இங்கு கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தமிழ் மொழியில் ஆண்பால் பெண்பால் ஆகிய இரண்டும் பன்மையைக் குறிக்காது. மேலும் இந்த ஆண்பால் பெண்பால் இரண்டும் மனிதர், தேவர், நரகர் ஆகியவர்களையேக் குறிக்கும். இங்கு ஒரு சில ஆண்பால் பெண்பால் சொற்களைப் பார்க்கலாம்.

 • ஆண்(Male)-பெண்( Female)
 • அப்பா,தந்தை(Daddy)- அம்மா, தாய்(Mummy)
 • நடிகன்(Actor)- நடிகை(Actress)
 • சிறுவன்,பையன்(Boy)- சிறுமி,(Girl
 • சகோதரன்(Brother)- சகோதரி(Sister)
 • அண்ணண்Eldest brother- அக்கா (Eldest sister)
 • தம்பி(Younger brother)- தங்கை(Younger sister)
 • தாத்தா(Grand father)-பாட்டி(GrandMother)
 • மாமா(Uncle) அத்தை(Aunt)
 • அரசன்(King)-அரசி (Queen)
 • மகன்(Son)- மகள்(Daughter)
 • மருமகன்(Son in law)- மருமகள்(Daughter in law)
ஆண் பாலும் பெண்பாலும்

ஆண் பாலும் பெண்பாலும்

Masculine gender and Feminine gender

Generally in the English language there are only two genders, They are masculine gender and feminine gender. In Tamil language, there are five different genders. Here we will see the masculine and feminine genders in Tamil. It is important to note that these two genders in Tamil language are used only for singular nouns. This classification only applies to the nouns of human, god and demon.

There are some common nouns that differentiate the masculine and feminine gender.

Here is the list.

 • ஆண்(Male)-பெண்( Female)
 • அப்பா,தந்தை(Daddy)- அம்மா, தாய்(Mummy)
 • நடிகன்(Actor)- நடிகை(Actress)
 • சிறுவன்,பையன்(Boy)- சிறுமி,(Girl
 • சகோதரன்(Brother)- சகோதரி(Sister)
 • அண்ணண்Eldest brother- அக்கா(Eldest sister)
 • தம்பி(Younger brother)- தங்கை(Younger sister)
 • தாத்தா(Grand father)-பாட்டி(GrandMother)
 • மாமா(Uncle) அத்தை(Aunt)
 • அரசன்(King)-அரசி( Queen)
 • மகன்(Son)- மகள்(Daughter)
 • மருமகன்(Son in law)- மருமகள்(Daughter in law)
 • பேரன் பேத்தி

  சில பொதுவான ஆங்கிலச் சொற்கள் தமிழில்:

 • மாணவன் மாணவி(student)
 • ஆசிரியர் ஆசிரியை(Teacher)
 • திருடன் திருடி(Thief)
 • தோழன் தோழி(Friend)

Some common English words inTamil:

 • மாணவன் மாணவி(student)
 • ஆசிரியர் ஆசிரியை(Teacher)
 • திருடன் திருடி(Thief)
 • தோழன் தோழி(Friend)

ஆண்பாலும் பெண்பாலும்.Masculine gender and Feminine gender was originally published on தமிழ் அநிதம்

Categories: இலக்கணம், பயிற்சி- Practice | பின்னூட்டமொன்றை இடுக

உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels

உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels

தமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை நொடிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒருவினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துக்கள் குறில் என்று அழைக்கப்படும். ஒரு எழுத்து ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அவை நெடில் என்று அழைக்கப்படும். சில எழுத்துக்கள் ஒலிப்பதற்கு அரை வினாடியே எடுத்துக் கொள்ளும் அவை ஒற்று என்று அழைக்கப்படும், உயிரெழுத்துக்களில் அ, இ , உ, எ,ஒ என்ற எழுத்துக்கள் ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவே எடுத்துக் கொள்வதால் அவை குறில் எழுத்துக்களாகும். ஆ, இ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள என்ற எழுத்துக்கள் நெடில் என்று அழைக்கப்படும்.

a picture short_long Tamil Vowels

A poster for short_long Tamil Vowels

Another important thing to understand in the Tamil grammar is the duration of the letters. Tamil being a phonetic language every sound has letter form representation. The English word syllable is the right way to explain how each letter of the Tamil language has its own sound. By learning the phonetic value of the letters one can easily start to read the language. The pronunciation of these letters depends upon how long it takes to make the particular sound. The unit of measure is called a Mathirai. A mathirai is the time it takes to snap your fingers or blink your eyes naturally. It is usually a second.

So when we take a second to sound a letterout, that letter is called kurrill. When we take two seconds to sound out a letter it is called neddill. Then there are some letters that needs only half a second to pronounce. These letters are called ottuRRu. In vowels, the letters அ, இ, உ, எ, ஒ are kurril. These five tamil letters are short vowels. These need only one second to pronounce. In vowels the letters ஆ, ஈ, ஊ, ஏ,ஐ, ஓ, ஒள are called neddill. These need two seconds to pronounce. These seven tamil letters arelong vowels.

உயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels was originally published on தமிழ் அநிதம்

Categories: பயிற்சி- Practice | 1 பின்னூட்டம்

Create a free website or blog at WordPress.com.